ARTICLE AD BOX
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தனது உடல் தகுதியை நிரூபித்திருந்தபோதிலும், இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ஏன்? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, ஷமிக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
Mohammed Shami - முகமது ஷமி சமீபத்தில், இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஷமி திறந்தவெளியில் பேசியிருந்தார்.
இந்நிலையில், ஷமி குறித்து பேசிய கங்குலி கூறியதாவது:
“ஷமி அபாரமாக பந்துவீசி வருகிறார். அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்.
நடந்து முடிந்த மூன்று ரஞ்சி போட்டிகளில் அவர் விளையாடிய விதத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.
தனி நபராக நின்று, பெங்கால் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார். கண்டிப்பாக ஷமியின் ஆட்டத்தைத் தேர்வு குழுவினர் கவனித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால், ஏன் இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவில்லை? தேர்வுக் குழுவில் நான் இருந்திருந்தால், உடல் தகுதி மற்றும் திறமை ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு ஷமியை கண்டிப்பாகத் தேர்வு செய்திருப்பேன்.
கங்குலி இந்தியாவுக்காக மீண்டும் அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என்று தேர்வுக்குழு நினைக்கிறது என்று தெரியவில்லை,” என்று கூறியுள்ளார்.
Mohammed Shami: `ஓய்வை அறிவித்தால்..' -கம்பேக் குறித்து முகமது ஷமி சொல்வதென்ன?
1 month ago
2







English (US) ·