இந்திய சுற்றுப்பயணம்: ஆஸி. ஏ அணியில் கான்ஸ்டாஸ், மெக்ஸ்வீனி

4 months ago 6
ARTICLE AD BOX

சிட்னி: ஆஸ்திரேலியா ‘ஏ‘ கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 4 நாட்​கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டி மற்​றும் 3 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாட உள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்​டம்​பர் 16 முதல் 20-ம் தேதி வரை​யும், 2-வது டெஸ்ட் போட்டி 23 முதல் 26-ம் தேதி வரை​யும் லக்​னோ​வில் நடை​பெற உள்​ளது. இதைத் தொடர்ந்து இரு அணி​களும் 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரிலும் மோதுகின்​றன. ஒரு​நாள் போட்டி செப்​டம்​பர் 30, அக்​டோபர் 3, 5-ம் தேதி​களில் நடை​பெறுகிறது.

இந்த தொடருக்​கான ஆஸ்​திரேலியா ஏ அணி​களை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது. டெஸ்ட் போட்​டிக்​கான அணி​யில், இந்த ஆண்டு தொடக்கத்​தில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான பார்​டர்​-க​வாஸ்​கர் தொடரில் அறி​முக வீரர்​களாக களமிறங்​கிய தொடக்க பேட்​ஸ்​மேன்​களான சேம் கான்​ஸ்​டாஸ், நேதன் மெக்​ஸ்​வீனி ஆகியோர் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

Read Entire Article