'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா!

1 month ago 4
ARTICLE AD BOX

பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போடி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்டியில் மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, 'இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்துவோம்!' என பேட் கம்மின்ஸ் பேசியதை போல லாராவும் பேசியது சுவாரஸ்யமான விஷயமாக இருந்தது.

Laura WolvardtLaura Wolvardt

லாரா பேசியதாவது, 'நாங்கள் நடந்து முடிந்த போட்டிகளையும் கடந்த காலத்தையும் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியும் அன்றைய நாளில் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறது என்றே நம்புகிறேன்.

எங்களின் எந்த வரலாற்றையும் இந்தப் போட்டிக்குள் திணிக்க விரும்பவில்லை. இந்த இறுதிப்போட்டியை ஒரு புதிய போட்டியாக புத்துணர்ச்சியோடு அணுகவே விரும்புகிறேன். இரு அணிகளின் மீதுமே பெரிய அழுத்தம் இருக்கிறது. எந்த அணியினர் அந்த அழுத்தத்தை நிதானமாக கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.' என்றார்.

India vs South AfricaIndia vs South Africa

தொடர்ந்து அவரிடம், 'பேட் கம்மின்ஸை போல உங்களுக்கும் இந்திய ரசிகர்களை அமைத்திப்படுத்திவிடுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?' என ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு, 'ஆம், நாங்கள் வெல்வோம் என நம்புகிறோம். எங்களின் வெற்றி இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்தும்!' என்றார்.

Read Entire Article