ARTICLE AD BOX

நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி ஷபாலி வர்மா (87), தீப்தி சர்மா (58), ஸ்மிருதி மந்தனா (45), ரிச்சா கோஷ் (34) ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது.
299 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது தீப்தி சர்மா, ஷபாலி வர்மா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் விளாசிய போதிலும் மற்ற வீராங்கனைகளிடம் இருந்து சிறந்த செயல் திறன் வெளிப்படாததால் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்தது.

1 month ago
3







English (US) ·