இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

5 months ago 6
ARTICLE AD BOX

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.

தமிழில் ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘ராஜாளி’, ‘காதல் கதை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவரது படங்களில் இடம்பெற்ற சாதி, மத, பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வசனங்கள் வரவேற்பை பெற்றன. 2011-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’ திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடைசியாக 2017-ம் ஆண்டு ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

Read Entire Article