இரிடியம் பெயரில் பல கோடி மோசடி: 30 பேரை கைது செய்தது சிபிசிஐடி 

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: ஒரு லட்​சம் ரூபாய் முதலீடு செய்​தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்​கும் என இரிடி​யம் பெயரில் தமிழகம் முழு​வதும் கோடிக்​கணக்​கில் பண மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக 30 பேரை சிபிசிஐடி போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

ரிசர்வ் வங்கி சார்​பில் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த ஆண்டு ஒரு புகார் கொடுக்​கப்​பட்​டது. அதில், ‘பிளாட்​டினம், தங்​கத்​தை​விட அதிக மதிப்​புடைய இரிடி​யத்தை விற்​பனை செய்து ரிசர்வ் வங்​கி​யில் கோடிக்​கணக்​கில் பணம் வைத்​திருப்​ப​தாக​வும், அந்​த பணத்​தை பெற சேவை கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் என்​றும், இதற்​காக ஒரு லட்​சம் ரூபாய் முதலீடு செய்​தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்​கும் என்​றும் ஆசை வார்த்தை கூறி மோசடி கும்​பல்​கள் பண மோசடி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன. மேலும், ரிசர்வ் வங்கி அதி​காரி​கள் போல ஆள்​மாறாட்​டம் செய்​தும், போலி ஆவணங்​களை தயாரித்​தும் இந்த மோசடி அரங்​கேற்​றப்​பட்​டுள்​ளது. இதில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என்று கூறப்​பட்​டிருந்​தது.

Read Entire Article