இளையராஜா 50: ``என்னை விட்டால் அவரது சுயசரிதைக்கு நானே திரைக்கதை எழுதிவிடுவேன்'' - ரஜினி பேச்சு

3 months ago 5
ARTICLE AD BOX

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் பயண நிறைவைக் கொண்டாடும் விதமாக நேற்று தமிழ்நாடு அரசு விழா ஒன்றை நடத்தியது.

அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டனர்.

கமல்ஹாசன் - இளையராஜாகமல்ஹாசன் - இளையராஜா

இந்த விழாவில் ரஜினிகாந்த், "திடீர் என்று ஒரு இசையமைப்பாளர் வந்தார். நான் உட்பட அனைவருமே அவர் பக்கம் சாய்ந்தோம். ஆனால், இளையராஜா அதை  பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அவரது வண்டி ரெக்கார்டிங்கிற்காக சரியாக 6.30 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவிற்கு போய்விடும்.

நான் அதிசய மனிதர்கள் பற்றி புராணங்களிலும், இதிகாசங்களிலும் படித்திருக்கிறேன். ஆனால், கண்களால் நேரில் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா தான்.

அப்போது இருந்த அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கு இளையராஜா இசையமைத்தார். எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இசையமைப்பேன் என்று இளையராஜா கூறுவார். ஆனால், அது உண்மை இல்லை.

அவர் கமலுக்கு மட்டும் நல்ல பாடல்களைத் தருவார். இதை நான் முதல்வர் முன்னிலையில் பதிவு செய்கிறேன்.

இளையராஜாஇளையராஜா

இளையராஜா மீது விவாதம் இருக்கலாம்... வாதம் இருக்கலாம். ஆனால், தனிமனித தாக்குதல் இருக்கக்கூடாது.

நீதி, நியாயம், கடின உழைப்பு இருந்தால், அனைத்துமே உங்கள் பக்கம் வந்துவிடும். அதைத்தான் இளையராஜா செய்தார்.

இளையராஜாவிற்கு இல்லாத திமிர் வேற யாருக்கு இருக்கும்? இதை வேறு யாராவது ஒத்துக்கொள்வீர்களா? அவர் அதற்கு தகுதியானவர்.

கமல்ஹாசன் நான்கு வரிகளைப் பாடினதும், நான் இவ்வளவு பேசினதும் ஒன்று. இது தான் இசையின் பவர். இளையராஜாவின் சுயசரிதை படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். என்னை விட்டால் நானே திரைக்கதை எழுதிவிடுவேன்" என்று பேசினார்.

இளையராஜா 50: 'இந்த' ஆல்பங்களை நீங்கள் வெளியிட வேண்டும்! - தமிழ்நாடு மக்கள் சார்பாக ஸ்டாலின் கோரிக்கை

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article