உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார்

3 months ago 5
ARTICLE AD BOX

டோக்கியோ: உலக தடகள சாம்​பியன்​ஷிப்​பின் ஈட்டி எறிதலில் டிரினி​டாட் மற்​றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்​காட் தங்​கப் பதக்​கம் வென்​றார். நடப்பு சாம்​பியன் அந்​தஸ்​துடன் களமிறங்​கிய இந்​தி​யா​வின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். அதேவேளை​யில் மற்​றொரு இந்​திய வீர​ரான சச்​சின் யாதவ் 4-வது இடம் பிடித்து கவனம் ஈர்த்​தார்.

உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி ஜப்​பானின் டோக்​கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இறு​திப் போட்டி நடை​பெற்​றது. நடப்பு சாம்​பியனும், ஒலிம்​பிக்​கில் இரு முறை தங்​கம் வென்ற இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா, ஒலிம்​பிக் சாம்​பிய​னான பாகிஸ்​தானின் அர்​ஷத் நதீம் உள்​ளிட்ட 12 வீரர்​கள் இதில் பங்​கேற்​றனர்.

Read Entire Article