உலக பளுதூக்குதல்: மீராபாய் சானுவுக்கு வெள்ளி

2 months ago 4
ARTICLE AD BOX

ஃபோர்டே: உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நார்வே நாட்டின் ஃபோர்டே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியின் மகளிர் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 199 கிலோ (ஸ்னாட்சில் 84 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க்கில் 115 கிலோ) தூக்கி 2-ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளியை கைப்பற்றினார். இதே பிரிவில் வட கொரியாவின் ரி சோங்கும் முதலிடம் பிடித்து தங்கமும், தாய்லாந்தின் தான்யாத்தோன் சுக்சரோயன் 3-ம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.

Read Entire Article