``எங்களை போன்ற இயக்குநர்கள் படுகின்ற பாடு எல்லாம் பெரிய கொடுமை; என் மகன்..'' - தங்கர் பச்சான்

6 months ago 8
ARTICLE AD BOX

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நடித்த ‘பேரன்பும் பெருங்கோவமும்’ திரைப்படம் இன்று (ஜூன்5) வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படத்தில் நடிகை ஷாலி நிவேகாஸ் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். 

இளையராஜா இசையில் வெளியாகவுள்ள இந்த படத்தை ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

‘பேரன்பும் பெருங்கோவமும்’ ‘பேரன்பும் பெருங்கோவமும்’

இந்நிலையில்  தங்கர் பச்சான் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ மூன்று ஆண்டுகளுக்கு மேலாக  ‘பேரன்பும் பெருங்கோவமும்’ படத்தின் வேலைகள் நடந்திருக்கிறது.

என் மூத்த மகன் விஜித் பச்சான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தமிழ் நாட்டின் மிக முக்கியமான ஆளுமைகள் இந்தப் படம் குறித்த கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகளாகிவிட்டது. இத்தனை வருடங்களில் இலக்கியம், சினிமா, சமூகப்பணி என்று இயங்கிக்கொண்டே இருக்கின்றேன்.  

என்னுடைய மகன் 12 ஆண்டுகளாக படிப்பை முடித்துவிட்டு இந்தத் திரைத்துறையில் வருவதற்கு  நிறைய முயற்சிகளை எடுத்திருக்கிறார்.

நிறையத் தோல்விகளையும் சந்திருக்கிறார். தற்போது இந்தப் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை வெளியிடுவதற்கு 8, 9 மாதங்களாக முயற்சி செய்து வருகிறோம்.

பேரன்பும் பெருங்கோபமும் படத்தில்...

பெரிய படங்கள் வரும்போது எங்களை போன்ற இயக்குநர்கள் படுகின்ற பாடு எல்லாம் பெரிய கொடுமை. கதையை நம்பி மட்டுமே நாங்கள் படம் எடுக்கிறோம்.

‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தைக் குடும்பத்துடன் சென்று பாருங்கள். இந்தப் படத்தை ஆதரிங்கள். என்னை ஆதரித்த மாதிரி என் மகனையும் ஆதரியுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"தங்கர் பச்சான் என்ற பெயர் உலகத்தில் வேறு யாருக்கும் இருக்காது. காரணம் இதுதான்"- தங்கர் பச்சான்
Read Entire Article