‘எதுவும் என் கையில் இல்லை’ - சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறும் ஊகம் குறித்து அஸ்வின்

4 months ago 6
ARTICLE AD BOX

சென்னை: மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் தனது எதிர்காலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால், அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

“ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஒரு அணியில் உள்ள வீரர், தன்னை தக்க வைக்கலாமா அல்லது விடுவிக்கலாமா என்பதை அணி நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கான உரிமை உள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் நிச்சயம் அது குறித்து தெளிவு படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் எதுவும் என் கையில் இல்லை. நான் அது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளேன்.

Read Entire Article