“எனக்கு பலரும் பணம் தரணும்!” - யோகி பாபு காட்டம்

7 months ago 8
ARTICLE AD BOX

“எனக்கு எவ்வளவோ பேர் பணம் தரவேண்டும்...” என்று பட விழாவில் பேசும்போது யோகி பாபு காட்டமாக குறிப்பிட்டார். சில தினங்களுக்கு முன்பு ‘கஜானா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் யோகி பாபு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு ரூ.7 லட்சம் கேட்பதாக தயாரிப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டினார். இது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இந்தப் பேச்சுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ‘கஜானா’ தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதனிடையே யோகி பாபு நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் யோகி பாபு கலந்துகொண்டு பேசும்போது, “என் சம்பளம் எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அனைத்தையும் வெளியில் இருப்பவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். நீங்களே சம்பளத்தை முடிவு செய்து நல்ல கதைகளை அனுப்புங்கள். ஆனால், சொன்ன சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிடுங்கள். சம்பள பாக்கியை கேட்டால் தான் இங்கு எதிரியாகி விடுகிறேன். அதுதான் உண்மை.

Read Entire Article