ARTICLE AD BOX
'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், "இப்போ நான் ரொம்ப பாசிட்டிவாக இருக்கிறேன் என எல்லாரும் சொல்றாங்க. அதுக்கு காரணம் வாழ்க்கையில நிறைய அடிவாங்குனதுதான்.
சினிமாவில் இயக்குநராக வேண்டுமென தனியார் ஐடி நிறுவன வேலையை விட்டு வந்தேன். என்னை இயக்குநராக பார்க்க 12 வருடம் ஆனது. எனக்கு 29 வயது இருக்கும் போதுதான் வீட்டிலும் கல்யாணம் செய்ய சொல்லி அழுத்தம் இருந்தது. முப்பது வயதை தொட்டுவிட்டால் ஜாதகத்தில் நிராகரித்து விடுவார்கள், வேலையிலும் நிராகரித்து விடுவார்கள், படங்களிலும் நிராகரித்துவிடுவார்கள்.
ஆனால் என்னுடைய 29 வது வயதில் நான் 'மது' என்னும் தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். பின்பு வேறொரு கதை எழுதி, 45 தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். அவர்கள் கட்டிப்பிடித்து பாராட்டுவார்கள். ஆனால் 'முதல் படமாக ஏன் இதை செய்ய வேண்டும். நீங்கள் இயக்கிய மது குறும்படத்தையே பண்ணலாமே' என சொல்வார்கள். 46வது நபராக கார்த்திக் சுப்புராஜும் அதைத்தான் சொன்னார். அவர்தான் என்னுடைய 'மது' குறும்படத்தை இன்னும் ஆறு குறும்படத்தோடு தியேட்டரில் ஸ்கிரீன் செய்தார்.
இயக்குநர் ரத்ன குமார்நிறைய பேர் என்னை பார்ப்பார்கள் கைகுலுக்கி 'நீங்கள் விஜய் அண்ணா ரசிகரா?
நீங்கள் லோகேஷ் கனகராஜ் நண்பரா?
இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் போட்டாக் கூட யோவ் மதன் கௌரியா?' என்று கேட்பார்கள்.
அப்போ எனக்காக யார் வந்து என்னை பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பேன். அதை மனதில் வைத்து இந்த '29' படத்தை எடுத்திருக்கிறேன். எனக்கான அடையாளத்தை இப்படத்தின் மூலம் பெறுவேன்" என்று பேசியிருக்கிறார் ரத்னகுமார்.

2 weeks ago
2







English (US) ·