ARTICLE AD BOX
Madampatty Rangaraj : மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. சமையல் கலைஞரானா மாதம்பட்டி ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக செய்தி காட்டு தீயாய் பரவியது. இப்போது வரை மாதம்பட்டி ரங்கராஜ் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதிவும் போடாமல் இருக்கிறார்.
இந்த சூழலில் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் இப்போது மீண்டும் விளக்கம் கொடுக்கும்படி ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அதாவது நான் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் சில வருடங்களுக்கு முன்பாகவே கணவன் மனைவியாக எங்களது பயணத்தை தொடங்கிவிட்டோம்.
மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் போட்ட பதிவு
joy-crizildaaமேலும் அன்பு, கண்ணியம் என முழு மரியாதையுடன் தொடங்கியதால் சில பயணம் அமைதியாக இருந்தாலும் நம்பிக்கையுடன் வளர்கிறது. இந்த ஆண்டு எங்களுடைய குழந்தையை வரவேற்கிறோம். இது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு போட்டிருக்கிறார்.
இது எரிகிற நெருப்பில் எண்ணெய் உற்றுவது போல தான் இருக்கிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பே மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் இருவரை இணைத்து வைத்து கிசுகிசுக்கள் வெளியானது. அப்போது தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி நான் தான் என்று ஸ்ருதி பதிவு போட்டிருந்தார்.
அப்படி என்றால் பல வருடங்களாகவே ரங்கராஜ் மற்றும் ஜாய் இருவரும் உறவில் இருப்பதால் விவாகரத்து பெறாமலே இவருடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. ஸ்ருதி இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கிறாரா என்பது விரைவில் தெரியவரும்.

5 months ago
6





English (US) ·