"எல்லா இயக்குநருக்கும் என்னுடைய ஒரு கோரிக்கை..!" - சிம்ரன் | Ananda Vikatan Cinema Awards 2024

6 months ago 7
ARTICLE AD BOX

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.

அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னையில் நடைபெற்றது.

சிம்ரன்

2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த வில்லன் நடிகை விருது சிம்ரன் பெற்றார். இந்த விருதினை இயக்குநர் எழில் வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சிம்ரன், "இந்த விருது எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த டிசைன் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனந்த விகடன் குடும்பத்துக்கு ரொம்ப நன்றி. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பிரசாந்த் கூட இந்த படத்துல நடிச்சேன்.

ரீமேக் படம் ரொம்ப சேலஞ்சிங்கான விஷயம். இதனை அங்கீகரித்ததற்கு விகடனுக்கு நன்றி. தற்கால எல்லா டைரக்டருக்கும் என்னுடைய ஒரே கோரிக்கை, ப்ளீஸ் ரியல் உமன் சென்ட்ரிங் ரோல்ஸ் எழுதுங்க. நான் வெயிட் பண்றேன்" என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விஜய் சேதுபதி: `தமிழ் சினிமாவிலிருந்து நடிப்புக்காக ஒரு இன்டெர்நேஷனல் ஹீரோ’ - இயக்குநர் ராம்
Read Entire Article