ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹர், ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார்.
'Filmygyan' என்ற ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், "ஒவ்வொரு அணிக்கும் அதன் நேரம் வரும், புதிய கேப்டன்கள் வருவார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இது அவர்களின் முடிவு.
ஆனால் அணிக்காக என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். ஒரு வீரராக, ரோஹித் மிகவும் அமைதியானவர்."
ராகுல் சாஹர்ஒரு கேப்டன் ஒரு வீரரை நம்புவது மிகவும் முக்கியம். எனக்கு நினைவில் இருக்கிறது, அவர் என் முகத்தைப் பார்த்து, நான் அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், என் தோளில் கை வைத்து சில விஷயங்களைப் பேசுவார்.
“நிம்மதியாக இரு” என்று சொல்வார். ஒரு தலைவராக, அவர் எல்லோரையும் எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்தவர். பும்ராவுக்கு என்னிடம் கூறிய அதே விஷயத்தை அவர் சொல்ல மாட்டார்; அவருக்கு ஏதாவது அறிவார்ந்த விஷயத்தை சொல்வார்.
எந்த வீரருக்கு என்ன சொல்ல வேண்டும், யாருடைய அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். ஒரு சம்பவத்தை மறக்க முடியாது. 2020ல் டெல்லிக்கு எதிராக ஒரு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.
நான் இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்தேன். ஆட்டத்திற்கு பிறகு நான் தலையை கவிழ்ந்து இருந்தேன். ரோஹித் வந்து, அணியை முன்னின்று வழிநடத்து என்று கூறினார்.
ரோஹித் சர்மா ஒரு ஆட்டம் மோசமாக போனால் என்ன, முழு சீசனும் நன்றாக இருந்தது இல்லையா? முன்னால் சென்று வழி காட்டு என்று அவர் கூறினார். அவர் எப்போதும் எங்களை ஊக்குவிப்பார் என்று ராகுல் சாஹர் ரோஹித் குறித்து பேசியுள்ளார்.
Rohit Sharma : 'விடைபெறுகிறேன்; அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!' - ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5







English (US) ·