“ஐபிஎல் 2025-ன் மிகச் சிறந்த ஷாட்!” - ஸ்ரேயஸ் அய்யருக்கு டிவில்லியர்ஸ் புகழாரம்

6 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் 2025-ன் ஆகச் சிறந்த இன்னிங்ஸை நேற்று ஸ்ரேயஸ் அய்யர் ஆடினார். அதில் அவர் பும்ரா வீசிய யார்க்கரை தேர்ட் மேனில் பவுண்டரி அடித்த ஷாட்டை 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ‘இந்த ஐபிஎல் தொடரில் ஆடப்பட்ட ஷாட்களிலேயே ஸ்ரேயஸ் அய்யரின் அந்த பவுண்டரிதான் ஆகச் சிறந்தது’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

204 ரன்களை இலக்காகக் கொண்டு இறங்கும்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை. பும்ராவிடம் ஓவரைக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. ஏனெனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக பும்ராவின் ஒரு ஓவர்தான் போட்டியையே மும்பைக்குச் சாதகமாக மாற்றியது. இப்போதும் பும்ராவையே நம்பியிருந்தார் பாண்டியா.

Read Entire Article