ARTICLE AD BOX

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 19 புள்ளிகளை குவித்து முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. அந்த அணி 2014-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றில் விளையாடுகிறது.

7 months ago
8







English (US) ·