ARTICLE AD BOX

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னைக்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் 15 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய திருச்சி இளைஞரை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலைத்தின் 9-வது நடைமேடைக்கு வந்தடைந்தது.

8 months ago
8







English (US) ·