ARTICLE AD BOX
2027 உலகக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான திட்டத்தில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.
தற்போது அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் (ODI) மட்டுமே விளையாடுகின்றனர். ரோஹித் ஷர்மா ஒருநாள் அணியின் கேப்டனாகவும், விராட் கோலி முக்கிய வீரராகவும் அணியில் தொடர்கிறார்கள்.
ரோஹித் ஷர்மா இதனிடையே மூத்த வீரர்களான விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால் 2027 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில் அம்பத்தி ராயுடு ரோஹித் குறித்து பேசியிருக்கிறார். "2027 உலகக்கோப்பை வரை நடைபெறும் ODI கேப்டனாக ரோஹித் தொடர வேண்டும்.
ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை. அவரது பேட்டிங் மற்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன்ஸி மிக முக்கியம்" என்று கூறியிருக்கிறார்.

4 months ago
6







English (US) ·