ARTICLE AD BOX

இயக்குநரும் படத்தொகுப்பாளருமான பி.ஆர்.விஜய், விதா ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘பிக்பாக்கெட்’. இதில் பி.ஆர். விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். பிரேம் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாஜகான் இசை அமைக்கிறார். படத்தை ஜே.எஸ்.ஜுபேர் எழுதி இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதை. இரவு 7மணிக்குத் தொடங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும். பிக்பாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதையையும் அமைத்துள்ளேன். பிக்பாக்கெட் திருடர்களுக்குப் பின் பெரிய மாஃபியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை வித்தியாசமாக சொல்கிறோம்” என்றார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் பூஜையுடன் தொடங்கியது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

6 months ago
7





English (US) ·