ARTICLE AD BOX
உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை உச்சத்துக்குக் கொண்டுசென்ற கேப்டன்களில் முக்கியமானவரான தோனியை, தங்களின் 'Hall of Fame' வீரர்களின் பட்டியலில் சேர்த்து கவுரப்படுத்தியிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC).
ஐ.சி.சி-யின் Hall of Fame பட்டியலில் இணையும் 11-வது இந்திய வீரரான தோனிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தோனி - ICC Hall of Fameஅந்த வரிசையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் தோனியைப் புகழ்ந்திருக்கிறார்.
ஐ.சி.சி வெளியிட்ட வீடியோவில் பேசிய ஜஸ்டின் லாங்கர், "எல்லா காலத்திலும் சிறந்தவர் தோனி. ஒவ்வொரு கேப்டனும் தோனியைப் போல இருக்க விரும்புகிறார்கள்.
MS Dhoni: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் கௌரவிக்கப்பட்ட தோனி - தோனி ரியாக்ஷன் என்ன?ஆனால், அவர்களால் அது முடியாது. தோனி ஒரு தனித்துவமான கேப்டன், ஒரு தனித்துவமான தலைவர், ஒரு தனித்துவமான மனிதர்.
தோனிக்கெதிராக நீங்கள் விளையாடும்போது, அவர் அவுட் ஆகும் வரையில் ஆட்டம் இன்னும் முடியவில்லை என்பது உங்களுக்கே தெரியும்" என்று பாராட்டினார்.
இதே வீடியோவில், ஏபி டிவில்லியர்ஸ், நாசர் ஹுசைன், கேரி கிறிஸ்டன் (இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் 2011), ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் தோனியைப் புகழ்ந்தனர்.
"Whenever you played against him, you knew the game was never over until he was out!"
Cricket greats celebrate MS Dhoni, one of the newest inductees in the ICC Hall of Fame
: https://t.co/oV8mFaBfze pic.twitter.com/118LvCP71Z
'Hall of Fame' பட்டியலில் தோனியுடன், தென்னாப்பிரிக்காவின் க்ரீம் ஸ்மித், ஹசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி மற்றும் வீராங்கனைகளில் பாகிஸ்தானின் சனா மிர், இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரையும் ஐ.சி.சி இணைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Dhoni : 'இந்திய அணியை கட்டியெழுப்பிய கேப்டன்!' - தோனிக்கு ஏன் 'Hall of Fame' கௌரவம் தெரியுமா?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7







English (US) ·