ARTICLE AD BOX

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கில் கடந்த ஓராண்டாகியும் துப்பு துலங்கவில்லை. வழக்கை சிபிசிஐடி போலீஸில் ஒப்படைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல், கிணற்றில் இட்ட கல்லாகவே இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60). திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த ஆண்டு மே 2-ம் தேதி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். மே 4-ம் தேதி அவரது வீட்டிற்கு பின்புறமுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கழுத்து, கைகள், கால்கள் மின் வயரால் கட்டியும், வயிற்றில் கடப்பா கல் கட்டப்பட்ட நிலையிலும் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

7 months ago
8







English (US) ·