கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

5 months ago 7
ARTICLE AD BOX

புதுடெல்லி: சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் கால்பந்து அணி 6 இடங்களை இழந்து 133-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவை இந்திய அணி சந்தித்துள்ளது. இதற்கு காரணம் ஜூன் மாதத்தில் நடைபெற்ற 2 ஆட்டங்களில் இந்திய அணி தோல்விகளை சந்தித்ததுதான்.

கடந்த ஜூன் 4-ம் தேதி தாய்லாந்து அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தகுதி சுற்றில் 0-1 என்ற கோல் கணக்கில் தன்னை விட தரவரிசையில் மிகவும் பின்தங்கிய ஹாங்காங் அணியிடம் இந்தியா வீழ்ந்திருந்தது.

Read Entire Article