கடலூர்: தனியார் சொகுசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

8 months ago 8
ARTICLE AD BOX

கடலூர்: கடலூரில் தனியார் சொகுசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் தனியார் சொகுசு பேருந்து இன்று( ஏப்.24) அதிகாலை சுமார் 2 மணிக்கு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி பகுதிக்கு வந்தது. சோதனை சாவடியில் இருந்த போலீஸார் அந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்த ஆவணங்களும் இன்றி ரூ 40 லட்சம் ஹவாலா பணம் இருப்பது தெரியவந்தது.

Read Entire Article