கனடியன் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா

4 months ago 6
ARTICLE AD BOX

மான்ட்ரியல்: க​ன​டா​வின் மான்ட்​ரியல் நகரில் கனடியன் ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் 49-ம் நிலை வீராங்​க​னை​யான நவோமி ஒசா​கா, போட்​டித் தரவரிசை​யில் 19-வது இடத்​தில் உள்ள டென்​மார்க்​கின் கிளாரா டவுசனை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் நவோமி ஒசாகா 6-2, 7-6 (9-7) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

4 கிராண்ட் ஸ்லாம் பட்​டங்​கள் வென்​றுள்ள நவோமி ஒசாகா இறு​திப் போட்​டி​யில், 85-ம் நிலை வீராங்​க​னை​யான கனடா​வின் விக்​டோரியா எம்​போகோவு
டன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். 18 வயதான விக்​டோரியா எம்​போகோ அரை இறுதி சுற்​றில் 9-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னாவை 1-6, 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் வீழ்த்​தி​னார்.

Read Entire Article