கமல், மணிரத்னம் மேஜிக் எப்படி இருக்கு.? தக் லைப் ட்விட்டர் விமர்சனம்

6 months ago 8
ARTICLE AD BOX

Thug Life Twitter Review: ஆடியன்ஸ் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த தக் லைஃப் இன்று வெளியாகிவிட்டது. கடந்த சில நாட்களாக கர்நாடகா பிரச்சனை ஒரு சர்ச்சையாக ஓடிக் கொண்டிருந்தது.

ஆனாலும் ஆண்டவர் அதை அசால்ட்டாக டீல் செய்து கர்நாடகாவை தவிர்த்து மற்ற இடங்களில் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். தற்போது படத்தை பார்த்த ஆடியன்ஸ் தங்கள் விமர்சனங்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

அதில் அனைவரும் மணிரத்னம், கமல் கூட்டணியை பாராட்டி வருகின்றனர். இவர்களுடைய மேஜிக் திரைக்கதையில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

அதில் சிம்புவின் கதாபாத்திரம் எதிர்பாராதது. இடைவேளை காட்சியில் அவருடைய கதாபாத்திரம் மாறுவது வேற லெவல் சர்ப்ரைஸ்.

தக் லைப் ட்விட்டர் விமர்சனம்

அதேபோல் கமல் சிம்பு இருவரும் வரும் அத்தனை காட்சிகளும் ஆடியன்ஸை கவர்ந்துள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் நாம் ஏற்கனவே கணித்தது போல் உள்ளது.

ஆனாலும் ஏ ஆர் ரகுமானின் இசை, கேமரா ஒர்க் அனைத்துமே பிளஸ் தான். கதை சாதாரணமாக இருந்தாலும் அதை மணிரத்னம் கொடுத்துள்ள விதம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதும் தெரியவரும்.

Read Entire Article