ARTICLE AD BOX

பெங்களூரு: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், “கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?" என்று நடிகர் சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில், “கமல்ஹாசன் எப்போதும் கன்னட மொழி குறித்து உயர்வாகவே பேசுவார், பெங்களூரு குறித்து மிகுந்த அபிமானம் கொண்டவர். நமது நகரைப் பற்றி அவர் எப்போதும் பெருமையாக பேசுவார். நாங்கள் எல்லாம் அவரைப் பார்த்து வளர்ந்தவர்கள். நான் எப்போதுமே அவரின் தீவிர ரசிகன். தமிழ் நடிகரும், இயக்குநருமான அவர், கன்னட கலாச்சாரம் மற்றும் சினிமாவுக்கு தொடர்ந்து மதிப்பளித்து வருகிறார். நான் கமல்ஹாசனை பார்த்து வளர்ந்தவன். நான் அவரைக் குறித்து எவ்வாறு பெருமைப்படுகிறேன் என்றால், நான் என் தந்தையை பற்றி பெருமை கொள்வது போன்றது அது.

7 months ago
8





English (US) ·