கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: சிறையில் உள்ள இருவர் மீது மேலும் ஒரு வழக்கு

9 months ago 8
ARTICLE AD BOX

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நச்சுக் கலந்த கள்ளச்சாராய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவர் மீதும் மேலும் ஒரு வழக்கை கள்ளக்குறிச்சி போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்ததால், அவர்கள் இருவரையும் மார்ச் 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கருணாபுரம் மற்றும் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்தாண்டு ஜூன் மாதம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நச்சுக் கலந்த கள்ளச் சாராயம் அருந்திய சம்பவத்தில் 229 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 69 பேர் உயிரிழந்தனர். 160 பேர் சிகிச்சைப் பெற்றதில் சிலர் கண்பார்வை இழந்துள்ளனர் . நச்சுக் கலந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்தது, கடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.

Read Entire Article