கள்ளநோட்டு அச்சடித்த மேலும் 4 பேர் கைது: தலைமறைவான விசிக பிரமுகரை பிடிக்க 3 தனிப்படை

8 months ago 8
ARTICLE AD BOX

விருத்தாசலம்: திட்டக்குடி அருகே கள்ளநோட்டு அச்சடித்ததாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மேலும் 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (39), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர், தனது வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ளநோட்டு அச்சடித்ததாக நேற்று முன்தினம் ராமநத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 2 பேரைக் கைது செய்தனர். ஆனால், செல்வம் தப்பியோடினார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டார்.

Read Entire Article