ARTICLE AD BOX

மும்பை: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். முதல் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய அவர், அதன் பின்னர் அவசரமாக தாயகம் புறப்பட்டுச் சென்றார். குஜராத் அணி நிர்வாகம், ரபாடா சொந்த காரணங்களுக்காக தாய்நாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி தென் ஆப்பிரிக்க வீரர்கள் சங்கத்தின் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரபாடா அதில், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தனக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். இது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

7 months ago
8







English (US) ·