காதலிப்பதாக ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. போலீசில் புகார் கொடுத்த காதலன்

6 months ago 7
ARTICLE AD BOX

ஒரு பெண்ணை ஒரு ஆண் ஏமாற்றினால் போதும் அனைவருமே ஒன்று கூடி பஞ்சாயத்து நடத்தி நியாயம் வாங்கி கொடுக்கிறார்கள் ஆனால் ஒரு ஆண் ஏமாந்தால் அது அலட்சியமாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் ஒரு ஐடி ஊழியர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தது சினிமாவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

போலீசில் புகார்

ஹரிஷ் என்பவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். சென்னை கௌரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த இவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் ஒரு பரபரப்பான பேட்டியையும் கொடுத்துள்ளார்.

சீரியல் நடிகை ரிஹானா :

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குமரவேலுக்கு அம்மாவாகவும் பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவங்க தான் சின்னத்திரை நடிகை ரிஹானா.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ரிஹானாவும் இவரும் காதலித்து வந்துள்ளனர். தனக்கு கடன் இருப்பதாக கூறி அவ்வப்போது ரிஹானா ஹரிஷிடம் பணம் வாங்குவதுண்டு.

திடீரென ஒரு நாள் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை அதனால் எனக்கும் உனக்கும் செட்டாகாது என்று ரிஹானா தன்னை பிரேக்கப் செய்ததாகவும், ஹரிஷ் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் மாங்காடு காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார் ரிஹானா.

தவறான புகார்

அந்தப் புகாரில் நான் அவரை அந்தரங்க ரீதியாக தொல்லை செய்ததாக புகார் அளித்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. நான் ரிஹானாவிற்கு பணம் கொடுத்த ஆதாரம் என்னிடம் உள்ளது. தயவு செய்து பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

pandian-stores-actress-reehana

என்னைப்போல் யாரெல்லாம் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை மேலும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஹரிஷ் இவ்வாறு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article