காந்தாராவை போல் உச்சம் தொட்ட கண்ணப்பா.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் விமர்சனங்கள்

6 months ago 7
ARTICLE AD BOX

Kanappa Premier show Twitter Review : முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்ஷய்குமார், மோகன் லால், சரத்குமார் என ஏகப்பட்ட திரை பிரபலங்களுமே ஒன்றிணைந்திருக்கும் படம் தான் கண்ணப்பா. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

kanappa-reviewkannappa-review

இந்த சூழலில் படத்தை பிரீமியர் ஷோவில் பார்த்த பிரபலங்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர். கண்ணப்பா படத்தின் கடைசி 30 நிமிடங்கள் என் மனதில் இருந்து இன்னும் அகற்றவில்லை. காந்தாரா படத்தில் உச்சகட்டத்தின் போது மட்டுமே இவ்வளவு தீவிரமான ஒன்றை தான் உணர்ந்ததாக ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

kanappakannappa

மேலும் இந்த படத்தை பார்த்த சிவ பக்தர்கள் நிச்சயமாக கண்ணீரில் மூழ்கி விடுவார்கள். படத்தில் பல காட்சிகள் உடம்பை சிலுக்க வைக்கிறது. உணர்ச்சிகரமாக காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். கடவுளை நம்பாமல் தனது மக்களுக்காகவும், பழங்குடியினருக்காகவும் போராடிய ஒரு போர் வீரனின் உண்மை கதைதான் கண்ணப்பா.

vishnu-kanappavishnu-kannappa

அவர் எப்படி சிவனின் சிறந்த பக்தராக மாறுகிறார் என்பதை இந்த படம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மோகன் லால் மற்றும் பிரபாஸின் கேமியோ கதாபாத்திரங்கள் அற்புதமாக அமைந்திருக்கிறது. கண்ணப்பாவாக வரும் விஷ்ணு மஞ்சு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

kanappa-twitterkannappa-twitter

அக்ஷய் குமார் சிவபெருமானாக தெய்வீக ஒளியையும் தூய்மையும் வெளிப்படுத்தி இருக்கிறார். பார்வதியாக காஜல் அகர்வால் அழகான உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் வேகம் சற்று குறைவாக இருப்பதும், பட்ஜெட் குறைவாக இருப்பதும் படத்திற்கு பலவீனமாக இருக்கிறது.

மற்றபடி படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே மனதில் நிற்கும்படி அமைந்திருக்கிறது. மேலும் ஒரு போர்வீரனின் கதையாக தொடங்கும் இந்த படம் தெய்வ வெளிப்பாட்டில் முடிகிறது. இறுதி கட்டம் கண்டிப்பாக இடியைப் போல் தாக்குகிறது. காந்தாராவில் கண்ணீர் விட்டிருந்தால் கண்ணப்பா உச்சகட்டத்தின் போது பக்தியுடன் அழத் தயாராகுங்கள் என்று ரசிகர் போட்ட பதிவு ட்ரெண்டாகிறது. ‌

Read Entire Article