ARTICLE AD BOX
`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.
தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இப்படம் நேற்று ( செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை நேற்று வடபழனி கமலா தியேட்டரில் நடிகர் பாலா உள்ளிட்ட படக் குழுவுடன் பார்த்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய நடிகர் பாலா, ``இந்த கமலா தியேட்டரில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாகப் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்வின் பெரும் பயணம் இந்த தியேட்டரில் தான் இருந்திருக்கிறது.
நிறைய முறை இந்த ஸ்கிரீனில் உட்கார்ந்து படம் பார்த்திருக்கிறேன். இப்போது நான் நடித்த படத்தையே இந்தத் தியேட்டரில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். இதெல்லாம் கனவா நினைவா என்று தெரியவில்லை.
சாதாரண நபர்கள் சேர்ந்து படம் எடுக்க முயன்றோம். ஒருவர் தயாரிப்பதாக உதவி செய்தார். ஒரு கட்டத்தில் படம் முடித்து, வெளியாவதற்கான நாள் கூட குறித்துவிட்டோம்.
காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா?ஆனால், படம் வெளியாவதற்கு முன்பான கடைசி மூன்று நாள்கள் நாங்கள் பட்ட கஷ்டம், அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. படத்துக்கு பேனர் வைக்க விடவில்லை. போஸ்டர் ஒட்ட விடவில்லை.
நிறைய தியேட்டரில் போஸ்டர் இல்லாமல் எங்கள் படம் ஓடவில்லை என நினைத்து மக்கள் திரும்பிச் சென்றதாகவும் தகவல் கிடைத்தது.
இப்போதுகூட எங்கள் படம் கமலா தியேட்டரில் வருகிறது என்றபோது, தியேட்டர் ஃபுல் ஆகுமா எனச் சிலர் கலாய்த்தார்கள். ஆனால், நான் வந்து சிலருக்கு டிக்கெட் கேட்டபோது ஹவுஸ் புல் எனச் சொன்னார்கள்.
KPY பாலா படம் அப்போதுதான் எங்களுக்கு முழு நம்பிக்கை வந்தது. நிறையத் தடங்கல்களைத் தாண்டிதான் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ரிலீஸ் ஆகி இவ்வளவு வரவேற்பு வருகிறது என்றால் அதற்கு மக்கள்தான் காரணம். தமிழ்நாட்டு மக்களுக்கு என் நன்றிகள்.
ஆரம்பத்திலிருந்து என் மீது நம்பிக்கை வைத்து, என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்த, என்னை ஹீரோ ஹீரோ எனச் சொல்லி என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்த அண்ணன் லாரன்ஸ்க்கு நன்றி" என அவரைக் கட்டியணைத்துக் கண்கலங்கினார்.
காந்தி கண்ணாடி: "பாலா சிரித்தால் மக்கள் சிரிக்கிறார்கள்; அழுதால் அழுகிறார்கள்" - நெகிழும் லாரன்ஸ்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·