‘கிங்’ கோலி... ‘இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி’யை மறக்க முடியுமா?!

7 months ago 8
ARTICLE AD BOX

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனைகளை பலரும் போற்றி வரும் சூழலில், கிரிக்கெட் உடன் இணைந்த அவரது பர்சனல் பக்கங்களை சற்றே புரட்டுவோம்...

‘இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி’ என்று விராட் கோலியைச் சொல்லலாம். கடந்த காலங்களில் இந்திய அணியை வழிநடத்தி வந்தவர்கள் (கங்குலியைத் தவிர) சாந்த சொரூபியாகவே இருந்தார்கள். எதிரணி வீரர்கள் நம் வீரர்களை ‘ஸ்லெட்ஜிங்’ செய்து உசுப்பேற்றினாலும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். ஆனால், “நம்மில் ஒருவரைச் சீண்டினாலும், ஒட்டுமொத்த எதிரணியையும் பதிலுக்குச் சீண்ட வேண்டும்” என்ற புதிய யுத்த முறையைக் கொண்டுவந்தவர் கோலி. கொஞ்சம் கங்குலி, கொஞ்சம் ரிக்கி பான்டிங் என்று சண்டைக்கார கேப்டன்களின் கலவையாக நின்றவர் விராட் கோலி. ஆனால், ‘தேவையான’ ஆக்ரோஷம் மட்டுமல்ல... அன்பும் நிரம்பிய உணர்வுபூர்வமான மனிதர்தான் இந்த கோலி.

Read Entire Article