கிணற்றில் கார் கவிழ்ந்து ஈரோடு விவசாயி உயிரிழப்பு - மீட்க முயன்ற மீனவரும் பலியான சோகம்

9 months ago 10
ARTICLE AD BOX

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பின்னோக்கி இயக்கப்பட்ட கார், 80 அடி உயர கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில், காரை இயக்கிய விவசாயி மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர் என இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த முள்ளிக்காபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். (40) விவசாயி. திருமணமான இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தனது உறவினர் காரினை எடுத்துக் கொண்டு நேற்று மாலை சிவக்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். காரினை ஓரமாக நிறுத்துவதற்காக, சிவக்குமார் பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது இவரது வீட்டின் அருகில் உள்ள 80 அடி உயர கிணற்றின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, கிணற்றுக்குள் கார் விழுந்து விபத்துக்குள்ளானது.

Read Entire Article