ARTICLE AD BOX

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் வலுவான இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

7 months ago
8







English (US) ·