ARTICLE AD BOX
வேல்ஸ் குழுமத்தின் தலைவர் ஐசரி கே. கணேஷின் மகள் ப்ரீத்தா கணேஷுக்கும் லஷ்வின் குமார் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
ரஜினி, கமல், கார்த்தி, ரவி மோகன், ஜீவா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் இந்தத் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களைத் தாண்டி, துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, நாதக-வின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
Vels Weddingஇன்று திருவான்மியூரிலுள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. நாளை சென்னையில் இந்தத் தம்பதிக்கு வரவேற்பு நிகழ்வு (ரிசப்ஷன்) பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.
ஐசரி கே கணேஷ் இல்ல திருமண விழா: ரஜினி, கமல், வைகோ, சேகர் பாபு பங்கேற்பு | Photo Albumதிருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை உணவு மெனு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா ஆகிய பகுதிகளின் முக்கியமான காலை உணவு வகைகளையும் இங்கு தயார் செய்திருக்கின்றனர்.
Food Menuஉணவு மெனு:
காசி ஹல்வா
இலை அடை
ஶ்ரீரங்கம் அக்காரவடிசல்
ஹயக்ரீவ மடி
தட்டு இட்லி
செட்டிநாடு பால் கொழுக்கட்டை
காஞ்சிபுரம் கோயில் இட்லி
இடியாப்பம்
வடகறி
கேரளா புட்டு
கடலை கறி
நேந்திரப் பழம்
மினி சாம்பார் வடை
மசால் வடை
ஆந்திரா பெசரட்டு
சட்னி வகைகள்
கும்பகோணம் கோஸ்து
சாம்பார்
குஜராத்தி தோக்லா
ஃபாப்டா
ராஜவாடி மசாலா
பப்பாளி சிங்
மிசல் பாவ்
காண்டே போஹா
தளிபீத்

7 months ago
8





English (US) ·