குளோபல் செஸ் லீக்கில் ஒரே அணியில் குகேஷ், எரிகைசி

3 months ago 5
ARTICLE AD BOX

மும்பை: குளோபல் செஸ் லீக்​கின் 3-வது சீசன் போட்டி வரும் டிசம்​பர் 13 முதல் 24 வரை மும்​பை​யில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடர் இந்​தி​யா​வில் நடத்​தப்​படு​வது இதுவே முதன்​முறை​யாகும். இதில் மொத்​தம் 6 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. 12 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்டி இரட்டை ரவுண்ட் ராபின் முறை​யில் நடத்​தப்​படு​கிறது. ஒவ்​வொரு அணி​யும் 10 ஆட்​டங்​களில் விளை​யாடும். 6 போர்​டு​களில் சிறப்​பாக செயல்​படும் அணி வெற்றி பெறும்.

இந்​நிலை​யில் இந்த போட்​டி​யில் ஒவ்​வொரு அணி​யில் இடம் பெறும் வீரர்​களை குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யும் நிகழ்ச்சி மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பிபிஜி அலாஸ்​கன் நைட்ஸ் அணிக்​காக உலக சாம்​பிய​னான டி.கு​கேஷும், உலகத் தரவரிசை​யில் 5-வது இடத்​தில் உள்ள அர்​ஜுன் எரி​கைசி​யும் தேர்​வா​னார்​கள்.

Read Entire Article