ARTICLE AD BOX

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், தீக் மாவட்டம், கக்ரா கிராமத்தைச் சேர்ந்த அசோக்குக்கும் ரவுனிஜா கிராமத்தைச் சேர்ந்த சரளாவுக்கும் கடந்த 2005-ல் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் சரளாவை துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், சரளா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததாக கூறி உடலை அவசரமாக எரிக்க முயன்றுள்ளனர். கிராம மக்கள் மூலம் தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று சரளாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

3 months ago
5







English (US) ·