கையில் வீச்சருவாளுடன் முரட்டு லுக்கில் சூர்யா.. வெளியானது சூர்யா 45 பட டைட்டில்

6 months ago 7
ARTICLE AD BOX

Suriya 45 Title: ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது அவரின் 45 ஆவது படம். ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் கூட படத்தின் டைட்டில் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஆனாலும் கருப்பு, வேட்டை கருப்பு போன்ற டைட்டில் இணையத்தில் பரவி வந்தது. இருப்பினும் பட குழு என்ன பெயர் வைத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள எல்லோருக்குமே ஆர்வம் இருக்கிறது.

அந்த ஆர்வத்திற்கு இன்று விடை தெரியப்போகிறது. அதாவது இன்று ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட இருக்கிறது.

வெளியானது சூர்யா 45 பட டைட்டில்

நேற்று இதன் அப்டேட் வந்த நிலையில் காலையில் இருந்தே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதன்படி தற்போது சூர்யா 45 படத்தின் டைட்டில் வெளியாகி இருக்கிறது.

அதன்படி கடந்த சில நாட்களாக இணையத்தில் கசிந்த செய்தி உண்மையாகி இருக்கிறது. அதாவது சூர்யா 45 படத்தின் டைட்டில் கருப்பு என்பதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த போஸ்டரில் சூர்யா கையில் பெரிய வீச்சருவாளை வைத்து இருக்கிறார். அவருக்கு பின்னணியில் விடாது கருப்பு சீரியலில் வரும் குதிரை, சூலம் என வேற லெவல் இருக்கிறது.

இதை பார்க்கும் போதே படம் எப்படி இருக்கும் என்றும் தெரிகிறது. நிச்சயம் இப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரும் வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. ரசிகர்களும் அதையே கூறி வாழ்த்துகின்றனர்.

Read Entire Article