கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

9 months ago 9
ARTICLE AD BOX

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளரிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று (மார்ச் 6) விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் விசாரித்த உதகை போலீஸார் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. மேலும், இவ்வழக்குடன், எஸ்டேட் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கையும் இணைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article