"கோவா 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்'"- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

1 month ago 2
ARTICLE AD BOX

கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்து, தேசமே சல்யூட் அடித்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார், அவரின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இராணுவ வீரரின் எல்லையற்ற அன்பு, தேசப் பற்று, தியாகம், வீரம், அவரது குடும்பம் பற்றிய உணர்வுப்பூர்வமான உண்மைக் கதையைச் சொல்லும் இத்திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பாராட்டுகளையும், வசூலையும் குவித்திருந்தது.

'அமரன்''அமரன்'

இதைத் தொடர்ந்து, அமரன் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' வென்றது. மேலும், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு 'அமரன்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக 'அமரன்' திரையிடப்படுகின்றது.

Amaran - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிAmaran - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து 3 திரைப்படங்கள் திரையிடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தொடக்க திரைப்படமாக (opening) தேர்வாகியிருக்கிறது.

மகிழ்ச்சியாகவும், கெளரவமாகவும் இதை நினைக்கிறேன். நடுவர் குழுவுக்கு நன்றி" என்று பேசியிருக்கிறார்.

Read Entire Article