ARTICLE AD BOX

சென்னை: கோவிலம்பாக்கம் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றதாக, டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக கடந்த 17-ம் தேதி முன்னெடுத்தது. அப்போது, ‘டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டம் நடைபெறும்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் சென்னை மாவட்டம் பாஜக சார்பில் கோவிலம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலினின் படத்தை ஒட்டும் போராட்டம் நேற்று நடந்தது.

9 months ago
8







English (US) ·