ARTICLE AD BOX

கோவை: கோவை நகைக்கடையில் போலி காசோலை வழங்கி ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் தங்க நகை கடைக்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காரில் வந்த இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் கடை ஊழியர்களிடம் தொழிலதிபர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பண்டிகைக்கு அன்பளிப்பாக வழங்க வைர நெக்லஸ் வேண்டும் என தெரிவித்தனர். ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வைர நெக்லஸ் தேர்வு செய்து பெற்றுக் கொண்டனர். காசோலையை கடை ஊழியர்களிடம் கொடுத்தனர். தொழிலதிபர்கள் என, நம்பிய கடை ஊழியர்கள், காசோலையுடன், முகவரி மற்றும் தொடர்பு எண்களை பெற்று கொண்டனர்.

10 months ago
9







English (US) ·