ARTICLE AD BOX
Samantha : சமந்தா ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து வந்தார். ஆனால் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இப்போது சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்து நடித்து வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார். பிரவீன் கேண்ட்ரெகுலா இயக்கத்தில் மரி காந்தி எழுதியுள்ள நிலையில் சுபம் படத்தை சமந்தா தயாரித்துள்ளார். இது தவிர தெலுங்கில் பங்காரம் என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் ரக்த் பிரம்மாந்த என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் சில காலங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
சமந்தா வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்

இதைத் தொடர்ந்து சமீபத்தில் நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் சமந்தா இயக்குனர் ராஜுவுடன் டேட்டிங்-இல் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இது குறித்து சமந்தா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இப்போது தனது சமூக வலைதளத்தில் ராஜுடன் இருக்கும் புகைப்படத்தை சமந்தா பதிவிட்டு இருக்கிறார். ஆகையால் சமந்தா ராஜூவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல தான் சமந்தா இப்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டதால் பிரச்சனை பெரிதாக இருக்கிறது. இது குறித்து சமந்தா கருத்து தெரிவிப்பாரா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

7 months ago
8





English (US) ·