சமாஜ்வாதி எம்.பி.யை மணக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்

6 months ago 7
ARTICLE AD BOX

லக்னோ: சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரியா சரோஜுடன், இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்த விழாவில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். லக்னோவிலுள்ள 5 நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு ரிங்கு சிங், பிரியா சரோஜ் ஆகியோரை வாழ்த்தினார்.

Read Entire Article