ARTICLE AD BOX

சென்னை: சமூக ஊடகங்களில் நீதிபதி குறித்து விமர்சனம் செய்த தவெக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தவெக தலைவர் விஜய், கரூரில் கடந்த 27-ம் தேதி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, கடந்த 3-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தார். பிரச்சார கூட்டத்துக்கு விஜய் சென்ற பேருந்து விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன்? அந்த பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

2 months ago
4







English (US) ·