ARTICLE AD BOX

ஜீதமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்-சீசன் 4’. இந்நிகழ்ச்சியின் இறுதிக் கட்டப் போட்டியான ‘கிராண்ட் பினாலே’ நேற்று முன் தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அங்கிருந்து நேரலையில் ஒளிபரப்பானது.
சிவகார்த்திகேயன், சந்தானம், ஆர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, தினேஷ், அபினேஷ், மகதி என ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் மோதினர். முடிவில், இந்த சீசனின் வெற்றியாளராக திவினேஷ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. முதல் ரன்னராக யோகஸ்ரீ, இரண்டாவது ரன்னராக ஹேமித்ரா தேர்வு செய்யப்பட்டனர். திவினேஷுக்கு மெல்லிசை இளவரசர் என்ற விருதையும் வழங்கி, ஜீ தமிழ் கவுரவித்தது. அர்ச்சனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஸ்ரீனிவாஸ், எஸ்பிபி சரண், சைந்தவி, ஸ்வேதா மோகன் நடுவர்களாகப் பங்கேற்றனர்.

7 months ago
8





English (US) ·