சாதம் ரூ.318; சீஸ்கேக் ரூ.748 - விராட் கோலி உணவகத்தின் விலைப் பட்டியல்

1 month ago 3
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிரிக்கெட் மட்டுமின்றி பிசினஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

அந்தவகையில் ‘One8 Commune’ என்ற உணவகத்தையும் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தை கோலி கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கினார்.

இந்த உணவகத்தின் பெயரான 'One8 Commune' என்பது கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது.

விராட் கோலி உணவகம்விராட் கோலி உணவகம்

அவரது ஜெர்சி எண் 18-ஐ குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இங்கு விற்கப்படும் உணவுகளின் விலைதான் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. 

விராட் கோலியின் ‘One8 Commune’  உணவகத்தின் மெனுவில் அசைவம், கடல் உணவுகள் மட்டுமின்றி, தாவர அடிப்படையிலான உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, விராட் கோலியின் தற்போதைய சைவ உணவு முறையைப் பிரதிபலிக்கும் வகையில், ‘விராட் ஃபேவரைட்ஸ்’  என்ற சிறப்புப் பிரிவும் இடம் பெற்றுள்ளது.

இதில் டோஃபு ஸ்டீக், ட்ரஃபிள் ஆயில் சேர்த்த மஷ்ரூம் டம்ப்ளிங்ஸ், சூப்பர்ஃபுட் சாலட் போன்ற உணவுகள் இடம்பெற்றுள்ளன. சைவ உணவின் விலை சற்று அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

விராட் கோலி உணவகம்விராட் கோலி உணவகம்

வெறும் சாதம் ரூ.318,  பிரெஞ்ச் ஃபிரைஸ் ரூ.348, மஸ்கார்போன் சீஸ்கேக் ரூ.748, தந்தூரி ரொட்டி ரூ.118 போன்ற விலைகளில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல் குறிப்பாக, செல்லப்பிராணிகளுக்கான உணவுகளும் ரூ.518 முதல் ரூ.818 வரை இங்கு விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article